Connect with us

இந்தியா

ஒரு மாத கரண்ட் பில் வெறும் 5 ரூபாய்: வைரலாகும் புகைப்படம்!

Published

on

By

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு புல்லட் வெறும் 18 ரூபாய்க்கு வாங்கிய பில்லின் புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது 1940ஆம் ஆண்டு வெறும் 5 ரூபாய் மட்டுமே கரண்ட் பில் கட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக நடுத்தர மற்றும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு கூட ரூபாய் 1000 ரூபாய் கரண்ட் பில் வருவதை பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கரண்ட் பில் அதிகரித்துவிட்டதை அடுத்து கரண்ட் பில் என்பது ஒரு பெரும் சுமையாகவே மக்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1940 ஆம் ஆண்டு ஒரு முழு மாதம் மின்சாரத்தை பயன்படுத்தியதற்கான பில் தொகை வெறும் 5 ரூபாய் என காட்டப்படும் ஒரு மின் கட்டண பில் சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர்.

1940 ஆம் ஆண்டு அதாவது சுதந்திரம் அடைவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட இந்த பில் பம்பாய் எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிராம்வே CO. லிமிடெட் என்ற அரசு சாரா நிறுவனம் இந்த பில்லை வெளியிட்டுள்ளது. இந்த பில்லில் வெறும் 5 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கான மின் கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பில்லில் வெறும் ரூ 3 ரூபாய் 10 காசு மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதன் பின்னர் வரிகள் சேர்த்து ஐந்து ரூபாய் இருபது காசு என மொத்த பில் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்போது மின் கட்டணத்தை கையால் எழுதியதையும் இந்த பில்லில் பார்க்கலாம்.

இந்த பில்லின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து தற்போதைய மின் கட்டணத்தையும் இந்த பழைய மின் கட்டணத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 1940ஆம் ஆண்டு மின்சாரம் ஒரு மாதத்திற்கு ரூ.5 என இருந்த நிலையில் தற்போது ஒரு யூனிட்டிற்கு கிட்டத்தட்ட ஐந்து ரூபாய் என கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.

இந்தியா5 mins ago

இண்டர்நெட் இருக்கு, பாப்கார்ன் இருக்கு, சானிடரி நாப்கின் இல்லை.. பிவிஆர் குறித்து கோபமான பெண்ணின் டுவிட்

இந்தியா18 mins ago

2023ல் மட்டும் 68,000 பேர் வேலைநீக்கம்.. இன்று மீண்டும் 1500 பேர்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா28 mins ago

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்!

வேலைவாய்ப்பு9 hours ago

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா10 hours ago

ஆண் குழந்தைக்கு அப்பாவான அட்லீ.. ஜவான், ஏகே63 என கொண்டாடும் ரசிகர்கள்!

சினிமா10 hours ago

த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!

வேலைவாய்ப்பு11 hours ago

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு11 hours ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 hours ago

குழந்தை பிறந்த 3 நாளில் வேலையிழந்த கூகுள் ஊழியர்.. அதிகாலை 2 மணிக்கு வந்த மெயில்..!

வேலைவாய்ப்பு11 hours ago

தமிழக வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

இந்தியா4 days ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

வணிகம்5 days ago

அதிரடியாக குறைந்தது ஆபரணத் தங்கம் விலை (27/01/2023)!

உலகம்2 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

வணிகம்3 days ago

இன்று தங்கம் விலை (29/01/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு வனத்துறை வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா2 days ago

ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

தமிழ்நாடு3 days ago

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

வணிகம்7 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!

இந்தியா2 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

வணிகம்2 days ago

இன்று ஆபரணத் தங்கம் விலை (30/01/2023)!