இந்தியா
காதலில் விழலாம்.. மணமேடையில் விழலாமா? திருமண போட்டோஷூட்டில் நடந்த விபரீதம்!
Published
1 month agoon
By
Shiva
திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோ ஷூட் என்பது தற்போது ஃபேஷன் வரும் நிலையில் திருமண போட்டோசூட்டின் போது மணமக்கள் தவறி விழுந்த சம்பவம் குறித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் திருமணத்தை புனிதமாக நமது முன்னோர்கள் கருதினார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் திருமணம் என்பது தற்போது ஒரு ஆடம்பர விழாவாக மாறிவிட்டது என்பதும் குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட் மற்றும் திருமணத்துக்குப் பிந்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய சில போட்டோஷூட் புகைப்படங்கள் அருவருக்கும் வகையில் இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஜோடி திருமணம் செய்து கொண்டபோது எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படத்தின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டிசம்பர் 15ஆம் தேதியன்று ஜெய்ப்பூர் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் திருமண உடை அணிந்து மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் திடீரென பேலன்ஸ் சரிந்து தரையில் விழுந்தார். அதையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோவுக்கு இதுவரை 18 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான நகைச்சுவை கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’காதலில் விழுவது என்பது இதுதானோ? என்று ஒரு சிலரும் ’திருமணத்திற்கு பின்னர் என்ன நடக்கப்போகிறது என்பதை இப்போது வெளிக்காட்டி விட்டது’ என்றும் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு நெட்டிசன் ’நான் சிரிக்க கூடாது ஆனால் நான் நிறைய சிரித்துக் கொண்டே இருக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CmMkLclgylC/
You may like
-
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
-
28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!
-
கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்.. கோடிக்கணக்கில் குவிந்த பரிசுகள்
-
சகோதரரின் திருமணத்திற்காக பிரிட்டனில் இருந்து பறந்து வந்த பெண்.. வைரல் வீடியோ
-
2022ல் திருமண கொண்டாட்டம்… இந்தியாவில் அதிக திருமணம் நடந்தது இந்த நகரில் தான்!
-
திருமணத்திற்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கிய மணமகள்.. சட்டென எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!