தமிழ்நாடு
ரெம்டெவிசிர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குவிந்த கூட்டம்!

கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் மறந்து வாங்குவதற்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரசால் தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் சென்னையில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததேகொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெவிசிர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ரெம்டெவிசிர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெவிசிர் மருந்து வாங்குவதற்காக கூட்டம் குவிந்து வருகிறதுஅதிகாலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் ரெம்டெவிசிர் மருந்து வாங்குவதற்காக காத்திருக்கின்றனர்.
Long serpentine queue at Kilpauk medical college to buy #Remdesivir as most of the private hospitals. Health Sec @RAKRI1 has confirmed that additional counters will be opened at Kilpauk soon and efforts are being made to follow same model in other dists also. #COVID19India pic.twitter.com/ivuJx7f8Xi
— Mugilan Chandrakumar (@Mugilan__C) April 27, 2021
மேலும் ரெம்டெவிசிர் அனைத்து மாவட்டங்களிலும் தாராளமாக இருந்தாலும் அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக ஒருசிலர் பதுக்கி இருப்பதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.
ரெம்டெவிசிர் மருந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து உடனடியாக கிடைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.











