Connect with us

இந்தியா

ப.சிதம்பரம் கனவிலும் கூட இதை நினைத்திருக்க மாட்டார்!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தை கைதுசெய்ய அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று அவரை கைது செய்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.

சிதம்பரத்தை கைது செய்து காரில் அழைத்துக்கொண்டு, லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். தான் திறந்துவைத்த அலுவலகத்தில் தானே கைது செய்யப்பட்டு அழைத்து வரப்படுவோம் என்று ப.சிதம்பரம் ஒருகாலமும் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்.

2011-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்க, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி முன்னிலை வகிக்க தனது நிர்வாகத்தின் கீழ் வரக்கூடிய சிபிஐயின் தலைமை அலுவலகத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திறந்துவைத்தார். சிதம்பரம் திறந்து வைத்த அந்த சிபிஐ அலுவலகத்தில் தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Franchise business for sale | franchises for sale brisbane business franchise australia.