தமிழ்நாடு
அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: விடாமல் துரத்தும் ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தனி நீதிபதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

#image_title
ஓபிஎஸ் தரப்பு அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது, அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அதிமுகவின் எடப்பாடி ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பின் இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.