தமிழ்நாடு
அதிமுக கொடியை இனி ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுக கொடியை கூட தனது காரில் கட்ட கூடாது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

#image_title
அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்த இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை அடுத்து இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி வசமானது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி அதிமுகவின் பெயரை, கட்சியை, இரட்டை இலை சின்னத்தை யாரும் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ முடியாது. இனிமேல் அதிமுக என்றால் எடப்பாடியார் தான். இதுவரை இருந்து வந்த அனைத்த போராட்டமும் முடிந்து விட்டது.
ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின் கொடியை இனிமேல் பயன்படுத்தினால் நாங்கள் கிரிமினல் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் அதிமுகவின் பெயரை சொல்லி ஓபிஎஸ் அமர முடியாது. நாளை முதல் ஓபிஎஸ் அவரது காரில் அதிமுக கொடியைக் கட்டிக் கொண்டு வருவாரா என்று பாருங்கள். அப்படி கொடியை கட்டிக் கொண்டு வந்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று பேசினார்.