சினிமா செய்திகள்
நடிகர் விவேக் குணமாக ஓபிஎஸ், வைரமுத்து வாழ்த்து!

சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
நடிகர் விவேக் அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் இதயம் மற்றும் நுரையீரல் செயல்களை சீர் செய்வதற்காக இந்த கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது
இந்த நிலையில் நடிகர் விவேக் விரைவில் குணமடைய திரையுலகினர், அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கூறியிருப்பதாவது: மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கூறியிருப்பதாவது:
சின்னக் கலைவாணர்
தம்பி விவேக்
விரைந்து நலமுற்று மீள வேண்டும்;
மனிதர்களின்
மாரடைப்பைத் தடுக்கின்ற
நகைச்சுவைக் கலைப்பணியை
வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்.
வாழ்த்துகிறேன்.




















