Connect with us

இந்தியா

ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடமில்லை: மோடி அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார்.

வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சியான அதிமுக இடம்பெறவில்லை. தமிழகத்தில் பாஜக அதிமுக உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்தித்தது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் பாஜக அதிமுக கூட்டணி 1 தொகுதியில் மட்டும் வென்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து தமிழகத்தில் பாஜக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நபரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக ஓபிஎஸ் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இன்று பதவியேற்ற மோடி அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் அமைச்சர் கனவு பலிக்கவில்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை வேலைவாய்ப்பு

Uncategorized9 மணி நேரங்கள் ago

டேட்டாவுக்கு வரி வரப் போகுது.

Uncategorized9 மணி நேரங்கள் ago

குடம்புளி மீன் குழம்பு – இத பத்தி உங்களுக்கு தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.03.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.03.2026

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி. இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

ஆன்மீகம்1 நாள் ago

திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி முருகன்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு – விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு.

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (08/03/2026)!

இந்தியா7 நாட்கள் ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

வணிகம்4 நாட்கள் ago

PPF vs SIP முதலீடு: ஆண்டுக்கு ₹10,000 சேமிப்பால் 10 ஆண்டுகளில் ₹2 லட்சம் சேர்க்க எது சிறந்தது?

கிரிக்கெட்6 நாட்கள் ago

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு – சஞ்சு சாம்சன் அதிரடி 89!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு நன்மை? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு பலன்கள்!

கிரிக்கெட்4 நாட்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

வணிகம்3 நாட்கள் ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்கள் vs தமிழ்நாடு அரசு திட்டங்கள் – சிறந்தது எது?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

Translate »
De bedste action oplevelse tilbud i viborg. ??. Şile kahvaltı mekanları.