Connect with us

விமர்சனம்

இந்திய பண்பாடு பற்றியும் யோசிச்சு இருக்கலாம் – Never Have i Ever விமர்சனம்

Published

on

வணக்கம் வாசகர்களே… நம் செய்தி சுருளில் Web Series Reivew செய்ய உள்ளோம். முன்னர் ஓரளவு முயற்சி செய்தோம். இனி தொடர்ந்து தர முயற்சி செய்வோம். உங்களுக்கு வேண்டிய சீரியஸை கமெண்ட் செய்தால் அவை பற்றியும் அறிமுகம் மற்றும் விமர்சனம் செய்வோம். சேர்ந்தே பயணிப்போம்.Ma
Never Have I Ever அமெரிக்காவில் குடியேறிய தமிழ் குடும்பம் குறிப்பாக முதல் தலைமுறை பற்றிய ஒரு சிறிய வெப் தொடராக Netflix-இல் வெளியாகி உள்ளது. (நீண்ட நாளுக்கு முன்னரே வெளியானது என்றாலும் தற்போது தான் பார்க்க முடிந்தது.) ஒரு இந்தியவம்சாவளியை சேர்ந்த அதாவது தமிழ் குடும்பத்தின் 16 வயது பெண் தேவி விஷ்வகுமார், தன்னை எப்படி அமெரிக்க பண்பாட்டிற்கு மாற்றி கொள்ள முயற்சி செய்கிறார். அதில் அவர் இன, நிற ரீதியாக எப்படி தவிர்க்கப்படுகிறார். முழுவதும் இந்திய மரபில் ஊறிப்போன தன் அம்மா நளினி உடன் ஒத்துப் போக முடியாமல் எந்த அளவு ஜெனரேசன் கேப்-ஆல் முரண் பட்டு நிற்கிறார் என்பதை நகைச்சுவை கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து 10 எபிஸோடுகளில் சொல்லியிருக்கிறது.

ஒவ்வொரு எப்பிசோடுக்கும் ஒரு தலைப்பு. தேவி முதன் முதலாக Sex வைக்க முயற்சி செய்வது, தன் நண்பர்களுடன் சண்டை, அவளது அறிவுத்திறனை காட்டுவது, தன் பள்ளி விழாவில் மரணமடைந்த அப்பாவின் நினைவில் தவிப்பது, அமெரிக்க பண்பாட்டிற்குள் தன்னை நுழைத்து கொள்ள முயற்சி செய்வது என சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தேவியாக இலங்கை தமிழர் மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். ஒட்டுமொத்த கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. அதை உணர்ந்து தன் சிறப்பை கொடுத்துள்ளார். நடிப்பில் மட்டுமல்ல பார்க்கவும் அவ்ளோ அழகாக இருக்கிறார். அவருடன் வரும் 3 நண்பர்கள் அவரது அம்மா நளினி, அவரது Cousin கமலா என சில பாத்திரங்கள் தேவியை சுற்றியே இருக்கின்றன. அவை எல்லாம் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பார்க்க அழகாக இருக்கிறது என்பது மட்டுமே இந்த Never Have i Ever உள்ள ஒரு சிறப்பு. அமெரிக்காவில் குடியேறிய இந்திய குடும்பம் அதிலும் தமிழ் குடும்ப பெண் குழந்தை பற்றிய வெப் தொடர் என உக்கார்ந்தால் ஒரு சிறு அளவுக்கு கூட இந்திய பண்பாடு பற்றிய புரிதல் இல்லாமல் Mindy Kaling மற்றும் Lang Fisher உருவாக்கியிருக்கிறார்கள். இந்த தொடரை பார்க்கும் யாருக்கும் இன்னும் இந்திய சமூகம் கற்காலத்தில் இருப்பதாகவே உணர்வார்கள். அவ்வளவு பிற்போக்குத்தனங்களுடன் தேவி, நளினி, கமலா என்ற முக்கிய பாத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஆங்காங்கே வரும் துணை பாத்திரங்கள் அதை விட மோசமாக காட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அத்தனை இந்தியர்கள் உள்ளபோது ஒருவரையாவது தங்களுடன் சேர்த்து கொண்டு இந்த தொடரை உருவாக்கியிருந்தால் நிச்சயம் இந்திய ரசிகர்களை கவர்ந்திருக்கும்.


இது ஒரு மினி சீரியஸ் தான். ஒவ்வொரு எப்பிசோடும் 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும். சிட்-காம் டைப் ரசிகர்கள் என்றால் நிச்சயம் உங்களை இந்த சீரியஸ் கவரும். இந்திய பண்பாடு மீது அதீத விருப்பம் கொண்டவர் என்றால் செம்மையா உங்களை கடுப்பாக்கும். ஒரு நாட்டின் பண்பாடு குறித்து துளி அளவு கூட புரிதல் இல்லாமல் இதை உருவாக்கியிருக்க வேண்டாம் என்றுதான் சொல்ல தோணுது. இதை பார்க்கும் போது உங்களுக்கும் அது தோணும்.

சினிமா செய்திகள்5 hours ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா3 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!