வணிகம்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, வாரன் பபெட்டை பின்னுக்குத்தள்ளி 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் வாரன் பபெட், பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 2.9 பில்லியன் டாலர் நிதி வழங்கினார். அதனால் அவரது செல்வ மதிப்பு 67.9 பில்லியன் டாலராக சரிந்தது.

மறுபக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 68.3 பில்லியன் டாலராக உள்ளதாக ப்ளூம்பெர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் படி முகேஷ் அம்பானி உல்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பேஸ்புக், இண்டெல், பிபி என பல்வேறு சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடுகளைப் பெற்றதே, முகேஷ் அம்பானி வேகமாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னேறுவதற்கான காரணமாக கூறப்படுகிறது.













