Connect with us

இந்தியா

முகேஷ் அம்பானியின் மூளையாக செயல்படும் இவருக்கு ரூ.1500 கோடி சொத்தா?

Published

on

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு நிழலாகவும் மூளையாகவும் செயல்படும் நபருக்கு 1500 கோடி சொத்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இவருடைய வளர்ச்சிக்கு மூளையாகவும் வலது கரமாகவும் இருப்பவர் மனோஜ் மோடி என்று கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தால் பல மில்லியன் டாலர் மதிப்பில்லான ஒப்பந்தங்கள் இவரால் தான் செய்யப்பட்டது என்றும் இவரது முயற்சியால் தான் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

#image_title

மனோஜ் மோடி மிகவும் அடக்கமானவர் மற்றும் புத்திசாலித்தனமானவர் என்றும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் மிகவும் வல்லவர் என்றும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி தனது கல்லூரி காலத்தில் இருந்து மனோஜ் மோடியை நண்பராக ஏற்றுக் கொண்டவர் என்றும் அதுமட்டுமின்றி குடும்ப அளவிலும் அவர் மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் தந்தை திருபா அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த போது மனோஜ் மோடி அந்த நிறுவனத்தில் சேர்ந்தார். அது முதல் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி ஆகியோர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக மனோஜ் மோடி இருந்து வருகிறார்.

ஃபேஸ்புக் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மனோஜ் மோடி தான் கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னெடுத்தார் என்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆகாஷ் அம்பானி உடன் இணைந்து ஜியோ மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் 43,000 கோடி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக மனோஜ் மோடி முடித்தார் என்றும் கூறப்படுகிறது.

மனோஜ் மோடி இந்த அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூளையாக இருந்தாலும் அவர் ஊடகங்களில் அதிகம் வெளிப்பட மாட்டார் என்பதும் அவர் ஊடகங்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள 22 மாடி அப்பார்ட்மெண்ட் வீட்டை மனோஜ் மோடிக்கு பரிசாக அளித்தார் என்றும் மனோஜ் மோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1500 கோடி என்று முன்னணி இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?