சினிமா செய்திகள்
மீண்டும் களமிறங்குகிறாரா மோனல் கஜ்ஜார்?

நடிகை மோனல் கஜ்ஜார் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பும் அளவுக்கு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2012ம் ஆண்டு சுடிகாடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் மோனல் கஜ்ஜார். அதற்கு அடுத்து தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்து வந்த அவர், சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்தார்.
ஆனால், அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. தக்காளிக்கு தாவணிய கட்டிவிட்ட பாடலில் அத்தனை அழகுடனும் தமிழ் இளைஞர்களை கவர்ந்தவர் மோனல் கஜ்ஜார். அவருக்கு ஏன் அதற்கு பிறகு எந்த படமும் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், சமீபத்தில் எடுத்த தனது போட்டோஷூட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, கோலிவுட், டோலிவுட், மோலிவுட் என தென்னிந்திய சினிமா நடிகை என டேக் செய்துள்ளார்.
இதனால், விரைவில் அடுத்த ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ஆண்டு அவர் நடிப்பில் காகஸ் எனும் இந்தி படம் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது.



















