தமிழ்நாடு
மோடியை மிரட்டி என்ன சாதிச்சிங்க: தம்பிதுரைக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

மக்களவை தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை. சில தினங்களுக்கு முன்னர் கரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த இவர் அதிமுகவில் மோடியை மிரட்ம் ஒரே நபர் தான் தான் என குறிப்பிட்டார். மேலும் மோடையை மிரட்டி பல திட்டங்களை கொண்டு வந்ததாக கூறினார் தம்பிதுரை. இதில் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே. நீங்களே பார்த்திருப்பீங்க, கடைசி வரை மோடிய எதிர்த்து குரல் கொடுத்தது நான்தான். மத்தியில அடுத்தும் மோடி ஆட்சிதான் வரும், நான் ஜெயிக்கலனா வேற யாராலும் மோடிய மிரட்டி திட்டம்லாம் வாங்கித் தர முடியாது. எனவே எனக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெற வையுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கரூர் தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவில் இருக்கக்கூடிய எங்களில் நான் ஒருவன்தான் மோடியை எதிர்த்துப் பேசுகிறேன். மோடியை மிரட்டுகிறேன் என்று பேசி இருக்கிறார் தம்பிதுரை, மோடியை இவர் மிரட்டுகிறாராம்? அப்படி மிரட்டி நீங்கள் இந்த கரூர் தொகுதிக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்து சேர்த்து இருக்கின்றீர்கள்? உங்களால் அதைச்சொல்ல முடியுமா? என தம்பிதுரைக்கு கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்.





















