தமிழ்நாடு
1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி முடிவானது!

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக வேகமாக செயல்பட்டு தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் காட்டிய திமுக தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை எல்லாம் தனது பக்கம் இழுத்து கூட்டணி அமைத்து இருக்கிறது.
திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மதிமுக அதனுடைய சின்னத்திலேயே போட்டியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















