தமிழ்நாடு
தூத்துக்குடியில் போட்டி.. கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் தமிழிசை?

சென்னை: லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்து இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார். அவர் இதற்காக நேற்று விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார்.
அவர் தனது பேட்டியில், தூத்துக்குடி தொகுதியை கேட்டு இருக்கிறோம். அதிமுகவிடம் தூத்துக்குடி தொகுதியை பாஜக கேட்டுள்ளது. அதேபோல் பாஜக பலமாக இருக்கும் ஐந்து தொகுதிகளை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம். அதிமுக தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தற்போது கனிமொழிக்கு எதிராக பாஜக களமிறங்குவது உறுதியாகி உள்ளது. தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை போட்டியிடுவாரா, இல்லை வேறு யாராவது நிற்க வைக்கப்படுவார்களா என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக போட்டியிட போகும் மீதமுள்ள தொகுதிகள் என்ன என்பதும் கேள்வியாக உள்ளது.















