தமிழ்நாடு
அப்பா முடிச்சிட்டோம்.. திமுக கூட்டணி இறுதியானது..அதிரடி காட்டிய ஸ்டாலின்!

சென்னை: திமுக கூட்டணி ஆலோசனை முடிவிற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
ஒருவழியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட தாமதமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி துரிதமாக பேச்சுவார்த்தையை முடித்து இருக்கிறது திமுக. மதிமுக உடன் திமுக பேச்சுவார்த்தை மட்டும் இழுபறியாக இருந்தது.
ஸ்டாலின் தனது பேட்டியில், திமுக கூட்டணி ஆலோசனை முடிவிற்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும்.
திமுக லோக்சபா தேர்தலில் மீதமுள்ள 20 இடங்களில் போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.
மார்ச் 7ல் இருந்து எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து ஆலோசிப்போம். இது தொடர்பாக கூட்டணி கட்சிகளை அழைத்து பேசுவோம். இரண்டு நாட்களில் தொகுதிகள் அறிவிக்கப்படும்.
















