Connect with us

சினிமா

அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்! ஜனவரி 23-ல் மீண்டும் திரையரங்குகளில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ்!

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளை அதிர வைத்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மங்காத்தா’. வெளியான காலகட்டத்தில் வசூல் சாதனைகளைப் படைத்த இந்த படம், இம்மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள் எப்போதும் இளைஞர்களிடையே தனித்த வரவேற்பைப் பெற்றவை. சென்னை 600028, சரோஜா, கோவா, மாநாடு போன்ற படங்களைத் தொடர்ந்து, அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த படம் ‘மங்காத்தா’. குறிப்பாக, அஜித் குமாருடன் இணைந்த இந்த படம், அவரின் நடிப்புப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இதுவரை நேர்மையான கதாநாயகனாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்ட அஜித், ‘மங்காத்தா’வில் வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் ஷேடு கொண்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு தொழிலதிபரின் கணக்கில் வராத பந்தயப் பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிடும் ஊழல் நிறைந்த அதிகாரியாக அவர் நடித்த விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த படத்தின் பாடல்களும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் இன்று வரை ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம் பிடித்துள்ளன. “மங்காத்தா தீம் மியூசிக்” தமிழ் சினிமாவின் ஐகானிக் BGM-களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் பல ஆண்டுகளாக ‘மங்காத்தா 2’ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்கட் பிரபு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதெல்லாம், ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வியே ‘மங்காத்தா 2 எப்போது?’ என்பதாக உள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர்களின் ஹிட் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, நல்ல வசூலைப் பெற்றுவருகின்றன. விஜயின் கில்லி, ரஜினியின் பாட்ஷா, கமலின் வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ரீ-ரிலீஸில் சாதனை படைத்த நிலையில், அந்த பட்டியலில் தற்போது ‘மங்காத்தா’வும் இணைந்துள்ளது.

வருகிற ஜனவரி 23 ஆம் தேதி ‘மங்காத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு, அஜித் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் அஜித் குமாருடன் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் மங்காத்தா மேஜிக்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்21 minutes ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்25 minutes ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு37 minutes ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்1 மணி நேரம் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்1 மணி நேரம் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்1 மணி நேரம் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

1 ஆண்டு கழித்து மேஷத்தில் புதாதித்ய ராஜயோகம்: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்2 மணி நேரங்கள் ago

கச்சா எண்ணெய் விலை உயர்வு: டாலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த UAE பரிசீலனை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Har du någonsin stannat upp och tänkt på hur snabbt elbilar har blivit en del av vår vardag ? de var en gång en sällsynt syn,. Strømlign opgaver, ruter og fakturering – planlæg hjemmeservice opgaver smartere, ikke hårdere.