சினிமா செய்திகள்
மங்காத்தா 2 கன்பார்ம்… மகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான மங்காத்தா படம் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவிற்கு பிளாக்பஸ்டர் ஆன படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்ற பேச்சு அப்போதே இருந்தது. ஆனால், அதற்கான நேரம் தற்போது தான் வெங்கட் பிரபுவிற்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் மங்காத்தா 2 படம் எடுக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அஜித் உடனான புகைப்படத்தை பதிவிட்டு, இது நடந்துவிட்டது என வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதனால், விரைவில் மங்காத்தா 2விற்கான பணிகள் தொடங்கும் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
நேற்றைய தினம் விஸ்வாசம் 50வது நாளை கொண்டாடி முடித்த கையோடு, அஜித் ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டத்திற்கான காரணமும் கிடைத்துள்ளது.














