தமிழ்நாடு
குலுங்கிய கோயம்பேடு.. காரில் ஏத்திட்டுபோய்.. கோலிவுட்டை மிஞ்சிய சம்பவம்.. அலறிய “பாபுஜி”

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே நடந்த கொலை சம்பவம் ஒன்று போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கொலை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாபுஜி. இவர் வெங்கட்ராமன் என்ற நபரிடம் வேலை பார்த்து வந்தார். வெங்கட்ராமன் வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். முக்கியமாக சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த அளவு கடன் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பாபுஜி இந்த கடை தொகைகளில் கையாடல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் வேலை பார்த்துக்கொண்டே இடையில் அவ்வப்போது பணத்தை பாபுஜி கையாடல் செய்து இருக்கிறார். அதோடு இல்லாமல் ஒருநாள் வெங்கட் ராமன் குழந்தையின் கழுத்தில் இருந்த செயினையும் திருடி இருக்கிறார்,. இப்படி செய்ததோடு இல்லாமல் அப்படியே வேலையை விட்டு நின்று உள்ளார்.
இதையடுத்து வெளியே பல ஆட்களிடம் வெங்கட்ராமன் குறித்து தவறாகவும் பேசி உள்ளார். அவரை பற்றி மோசமாக நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் கேள்விப்பட்ட வெங்கட்ராமன் தனது ஆட்கள் கோபி, கணபதி, திலீப் ஆகியோருடன் சென்று பாபுஜியுடன் சண்டை போட்டுள்ளார்.
கோயம்பேட்டில் பிரபல ஹோட்டல் ஒன்றில் பாபுஜி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அவரை அப்படியே காரில் ஏற்றி சினிமாவில் காட்டுவது போல பல இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளனர். பல பகுதிகளில் சுற்றிவிட்டு கடைசியில் நூலம்பூர் என்ற பகுதியில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
கத்தியால் குத்தியதில் இவர் உயிர் பிரிந்து உள்ளது. சினிமா பாணியில் இந்த கொலை நடந்து உள்ளது. முதலில் பாபுஜியை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அதன்பின்தான் வெங்கட்ராமனிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையை ஒப்புக்கொண்டார். அவருடன் கொலை செய்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்னும் 2 பேர் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.