தமிழ்நாடு
போலீசுக்கு என்னாச்சு.. அடுத்தடுத்து 3 ரவுடிகளை.. 3 மாவட்டத்தில் சுட்டு பிடித்த போலீஸ்

சென்னை: தமிழ்நாடு போலீசார் கடந்த 1 வாரத்தில் 3 ரவுடிகளை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 3 வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன.
சம்பவம் 1 – கோவையில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரை காலில் சுட்டு பிடித்தனர். விசாரணைக்காக இவரை கரட்டுமேடு பகுதிக்கு அழைத்து சென்ற போது அவர் காலில் சுட்டு பிடித்தனர். ரவுடி சத்யா என்பவரை கொலை செய்த வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் இவரை கைது செய்த நிலையில் விசாரணையின் போது தப்பி ஓட முயன்றதற்காக சுட்டனர்.
சம்பவம் 2 – தஞ்சாவூரில் பூவனூர் ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரவீன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவரை கண்டுபிடித்து அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை வெட்டிவிட்டு இவர் தப்பி ஓட முயன்றார். இந்த நிலையில் போலீசார் இவனின் காலில் சுட்டு பிடித்தனர்.
சம்பவம் 3 – இன்று காலை தூத்துக்குடியில் ஜெயப்பிரகாஷ் என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர். கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார். இவரின் கொலை வழக்கில் போலீசார் பிரகாஷை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசாருக்கு அவரின் இருப்பிடம் குறித்து தெரியவர அவனை கைது செய்ய சென்றனர். ஆனால் அப்போது போலீசாரை தாக்கிவிட்டு இவர் தப்பி ஓட முயன்றார். இந்த நிலையில் போலீசார் இவனின் காலில் சுட்டு பிடித்தனர்.
ஒரே வாரத்தில் நடந்த இந்த 3 சம்பவங்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.