இந்தியா
உறவினரின் தலையை துண்டாக வெட்டி செல்பி எடுத்த கொலைகாரர்கள்.. அதிர்ச்சி சம்பவம்
Published
2 months agoon
By
Shiva
உறவினரின் தலையை வெட்டி துண்டிக்கப்பட்ட தலையுடன் கொலையாளிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் முண்டா என்பவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்த நிலையில் முண்டாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்று தலையை வெட்டி உடலையும் கண்டதுண்டமாக வெட்டி வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசி உள்ளனர்.
அதுமட்டுமின்றி கொலை செய்த பின்னர் தலையை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் செல்பி எடுத்துள்ளனர். இந்த நிலையில் தனது கணவரை காணவில்லை என முண்டாவின் மனைவி போலீசாரிடம் புகார் கொடுக்க அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர்.
அப்போது ஒரு இடத்தில் தலையும் மற்ற இடங்களில் உடல்களின் பாகங்களும் பல்வேறு இடத்திலும் சிதறிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை செய்தபோது நிலத்தகராறு காரணமாக தான் கொலை செய்தோம் என்றும் கொலை செய்த உடன் தலையை எடுத்து செல்பி எடுத்துக் கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
You may like
மின்சார கட்டணம் செலுத்தாததால் அடித்தே கொல்லப்பட்ட முதியவர்: அதிர்ச்சி சம்பவம்!
பைக்கில் 1 கிமீ இழுத்து செல்லப்பட்ட முதியவர்.. ஈவு இரக்கமில்லா இளைஞர் கைது: அதிர்ச்சி வீடியோ
புகாருக்கு பின் மீண்டும் டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட உர்பி ஜாவேத்.. வைரல் வீடியோ
அடக்கடவுளே! போலீஸ் ஸ்டேஷன் அருகே துப்பாக்கிச்சூடு; பிரபல நடிகை பரிதாப பலி
ஒரே ஒரு க்ளிக்.. ரூ.37 லட்சம் காலி.. சைபர் க்ரைம் எச்சரிக்கை!
ஓடும் பேருந்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்.. போலீஸ் வரும்வரை காத்திருந்து கைது!