வைரல் செய்திகள்
சச்சின் ட்வீட் விவகாரம்… மரியா ஷரபோவா-விடம் மன்னிப்புக் கேட்கும் மலையாள தேசம்..!

மரிய ஷரபோவாவிடம் ஒட்டுமொத்த மலையாள தேசமும் மன்னிப்புக் கேட்டு வருவது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு முறை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா ‘யார் அந்த சச்சின்?’ எனக் கேள்வி கேட்டிருந்தார். உண்மையிலேயே சச்சின் என்பவர் யார் எனத் தெரியாமல் யதார்த்தமாக அவர் பேசியதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் குறிப்பாக அதிக மலையாளிகள் அவர் பேஸ்புக் பக்கத்துக்குச் சென்று அவரைக் கேலி செய்து கலாய்த்துத் தள்ளிவிட்டனர்.
தற்போது சச்சின் டெண்டுல்கர் விவசாயிகள் போராட்டத்துக்கு அரசு ஆதரவாகப் பேசியுள்ளது விவசாயிகள் உட்பட பொதுமக்களை அதிகப்படியாக வெறுப்படையச் செய்துள்ளது. அன்று மரியா ஷரபோவாவிடம் கிரிக்கெட் கடவுள் தெரியாதா எனக் கேலி பேசியதற்கு இன்று இந்தியாவே அவரிடம் மன்னிப்புக் கேட்டு வருகிறது.
குறிப்பாக மலையாள தேசம் ‘சாரி மரியா ஷரபோவா’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.













