தமிழ்நாடு
பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ பைக்: சென்னையில் அறிமுகம்!

ரேபிடோ ஆப் என்பது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு டாக்ஸி போன்ற அமைப்பு ஆகும். இது இப்போது மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, பெண்களே இயக்கும் ரேபிடோ ஆப் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரேபிடோ ஆப் (Rapido App)
மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருதி, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்டமாக ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, எழும்பூர் மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரேபிடோ சேவை இயக்கப்பட்டு வருகிறது.
நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவைய, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநரான ராஜேஷ் சதுர்வேதி கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார். இது பெண்களுக்கு பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. விரைவில் இந்த சேவை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
ரேபிடோ சேவை சென்னையில் பிரபலமாகி வரும் நிலையில், மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.