இந்தியா
வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலா? பரபரக்கும் அரசியல் களம்!

மோடி சமூகம் குறித்த அவதூறு பேச்சுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி. இந்நிலையில் இன்று கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து இன்று காலை 11:30 மணிக்கு கர்நாடக மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது தேர்தல் ஆணையம். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் உடனடியாக அவரை தகுதி நீக்கம் செய்தது மக்களவை செயலகம். மேலும் அவர் வசித்து வந்த வீட்டையும் காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது மக்களவை வீட்டு வசதிக்குழு. எல்லாம் அடுத்தடுத்து கால தாமதம் இல்லாமல் நடந்து வருவதால் இடைத்தேர்தல் அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.