Connect with us

சினிமா செய்திகள்

சித்தார்த் கூறியது முழுக்க முழுக்க பொய்: என்ன நடந்தது என விளக்கமளித்த அதிகாரி!

Published

on

மதுரை விமான நிலையத்தில் தன்னையும் தனது பெற்றோரையும் ஹிந்தியில் பேசுமாறு விமான நிலைய அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என மதுரை விமான நிலைய அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகரான சித்தார்த் சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு தான் கூறியதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் 20 நிமிடங்களுக்கும் மேல் தானும் தனது பெற்றோரும் துன்பத்திற்கு உள்ளானோம் என்றும் எனது பெற்றோர் கொண்டு வந்த பையில் இருந்த நாணயங்களை எடுக்கும் படி கூறினார்கள் என்றும் தொடர்ந்து ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சித்தார்த்தின் இந்த சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் மதுரை எம்பி வெங்கடேஷ் உள்பட பலர் கண்டனத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். சென்னை செல்வதற்காக சித்தார்த் தனது குடும்பத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு 04.15 மணிக்கு வந்தபோது அவரை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் சோதனை செய்தனர் என்றும் அப்போது முகக்கவசத்தை அகற்றுமாறு மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு வழக்கமான பாதுகாப்பு நடைமுறை தான் என்றும் சித்தார்த்தின் குடும்பத்தினரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு 10 நிமிடத்தில் அனுப்பப்பட்டார்கள் என்றும் அவர்களை யாரும் எந்தவித கொடுமையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சித்தார்த் மற்றும் அவரது பெற்றோரை சோதனை செய்தது தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரை சேர்ந்த பெண் அதிகாரி தான் என்றும் அவர் தமிழில்தான் சித்தார்த்திடம் பேசினார் என்றும் ஹிந்தியில் பேசவில்லை என்றும் சித்தார்த்தும் அவருடைய பெற்றோர்களும் தான் ஹிந்தியில் பேசினார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் ஹிந்தியில் பேசியதாக சித்தார்த் கூறுவது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் சித்தார்த்தின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் விமான நிலையத்திலிருந்து அவர் புறப்பட்டது வரை அனைத்து காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும் தேவைப்பட்டால் அதை வெளியிட தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?