தமிழ்நாடு
தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை மட்டும் அல்ல, வேறு எந்த மொழியையும் அதன் மீது திணிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

#image_title
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியை விட மிகப்பழமையானது தமிழ் மொழி. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழியாகும் என்றார்.
மேலும் தமிழ் மொழியின் மீது இந்தி மொழியை மட்டும் அல்ல வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது. தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. தமிழ் நூலான திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கொண்டுள்ளது. திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடம் வலியுறுத்தினார்.