சினிமா செய்திகள்
வேலை இல்லாதவர்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.. நடிகர் சித்தார்த் ஆவேசம்!
Published
1 month agoon
By
Tamilarasu
வேலை இல்லாதவர்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் என நடிகர் சித்தார்த் சமூக ஊடகம் ஒன்றில் செய்த பதிவு வைரலாகி வருகிறது.
விமான நிலையங்களில் நாம் பயணம் செய்யும் போது அங்குள்ள பாதுகாவலர்கள் இந்தியில் பேச வேண்டும் என தமிழ்நாட்டில் கூறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்போது நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்திற்குத் தனது குடும்பத்தினருடன் சென்ற போது அவர்களது பையில் நாணயம் இருந்துள்ளது.
அதை வெளியில் எடுக்கச் சொல்லி சித்தார்த்தின் பெற்றோர்களிடம் இந்தியில் கூறியுள்ளார்கள். அப்போது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கேட்டதற்குத் தொடர்ந்து இந்தியில் பேசியுள்ளார்கள்.
மேலும் அவர்களுக்கு 20 நிமிடங்களைத் தொல்லை கொடுத்துள்ளார்கள்.
அதனை எதிர்த்துக் கேட்டதற்கு, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனத் திமிருடன் அந்த அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
சித்தார்த்தின் இந்த பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
You may like
-
சித்தார்த் கூறியது முழுக்க முழுக்க பொய்: என்ன நடந்தது என விளக்கமளித்த அதிகாரி!
-
மன்னிப்பு கேட்ட பின்னரும் வழக்குப்பதிவு: சித்தார்த்துக்கு சிக்கலா?
-
நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும்: பிக்பாஸ் தமிழ் நடிகை டுவிட்!
-
நல்லவேளை தப்பித்தேன்!… அறுவை சிகிசைக்கு பின் நடிகர் சித்தார்த் பதிவு…
-
ஜெயலலிதாவுக்கு பின் ஸ்டாலின்: நடிகர் சித்தார்த் டுவிட்
-
பாஜகவினர் தன்னை மிரட்டுகின்றனர். நடிகர் சித்தார்த் திடுக்கிடும் புகார்