Connect with us

தமிழ்நாடு

என்ன கொடுமைங்க இது? தயிருக்கு பதில் தஹியா? ஆவினை காப்பாத்துங்க.. சீறும் ராமதாஸ்

Published

on

சென்னை: இந்திய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தாஹி என்ற இந்திச் சொல்லைத் தான் எழுத வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நடுவண் அரசின் இந்த மறைமுகமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India- FSSAI) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது இந்தியை திணிக்கும் நோக்கத்திற்காக நடுவண் அரசால் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதற்காக உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு தான் மாநில மொழிச் சொற்களுக்கு மாற்றாக இந்தி சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று தர ஆணையம் கட்டாயப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் ஆவின், கர்நாடகத்தின் நந்தினி, கேரளத்தின் மில்மா உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது; மாறாக தாஹி என்ற இந்திச் சொல்லை பெரிய எழுத்திலும், அதைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் மாநில மொழிச் சொல்லையும் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக அரசு இந்த சிக்கலில் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.

எந்த அடிப்படையில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் தயிர் என்பதை தாஹி என்று தான் அழைக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு, இந்தி மொழியை தமிழர்களிடம் திணிப்பதில் இது ஒரு புதிய உத்தி என வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறேன். கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சேவை மையம் என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. அதை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அகற்றப்பட்டது.

இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க நடுவண் அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாக இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.

author avatar
seithichurul
இந்தியா46 நிமிடங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா1 மணி நேரம் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா