சினிமா செய்திகள்
நடிகர் மாதவனின் மனைவி, அப்பா-அம்மாவை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்!

மணிரத்தினம் இயக்கிய ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2000 ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பின்னர் ’மின்னலே’ ’பார்த்தாலே பரவசம்’ ’அன்பே சிவம்’ ’லேசா லேசா’ ’ஆயுத எழுத்து’ ’இறுதிச்சுற்று’ ’விக்ரம்வேதா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது அவர் ராக்கெட்டரி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது மகனின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவரது மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் பல பதக்கங்களை அவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் தனது மனைவி, மகன் மற்றும் அப்பா அம்மாவுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை மாதவனின் மனைவி மற்றும் அப்பா அம்மாவை யாரும் பார்த்ததில்லை என்பதால் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது குடும்பத்தினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.