சினிமா செய்திகள்
மகளிர் தினத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்த ஸ்பெஷல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் ’அண்ணாத்த’, செல்வராகவன் உடன் ‘சாணிக்காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் நானி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியதை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவரது பாட்டி அம்மா மற்றும் சகோதரி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷின் பாட்டியும் அம்மாவும் நடிகைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது,
அதுமட்டுமன்றி கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் இந்த நாட்டில் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையிலும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பெண்கள் முன்னேறுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் அவர்களுடைய வலிமை அவர்களை முன்னேற்றி வருகிறது என்றும் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
















