சினிமா செய்திகள்
மாலத்தீவில் ஐஸ்வர்யா ராஜேஷ்: வைரலாகும் புகைப்படங்கள், வீடியோக்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பொன்னியின் செல்வன் உள்பட 4 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் விரைவில் இரண்டு திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் ஓய்வுக்காக மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் அழகிய கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் பதிவு செய்த வீடியோவில் விமானத்தில் இருந்து மாலத்தீவின் அழகை படம்பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் பதிவு செய்த இன்னொரு புகைப்படத்தில் மாலத்தீவில் சூரியன் அஸ்தமனமாகும் காட்சி உள்ளது.
இது குறித்து கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் ’மாலத்தீவில் சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் அழகே தனி என்றும், ஒவ்வொருவரும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறையாவது மாலத்தீவு வந்து இந்த அனுபவத்தை பெறுங்கள் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.






















