Uncategorized
நீண்ட கால லிவ் இன் உறவு – ஆண் மீது பெண் பாலியல் புகார் கூற முடியாது – நீதிமன்ற தீர்ப்பு

சமீப காலங்களாக லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அப்படி வாழும்போது அவர்களுக்குள் அணைத்து வகையிலான உறவுகளும் நடைபெறுகிறது. ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால் ஆண் நண்பர்கள் மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கும் சம்பவங்களும் அதிகரித்தே வருகின்றன.
16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்த ஒரு கல்லூரிப் பேராசிரியை இப்போது தன்னுடன் வாழ்ந்த வங்கி மேலாளர் திருமண ஆசை காட்டி ஏமாற்றி தன்னிடம் பாலியல் உறவு வைத்திருந்து ஏமாற்றி விட்டார் என போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்து அறிந்து நீதிபதிகள் வங்கி மேலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர்.
“நீண்டகால லிவ் இன் உறவில் ஆண் மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க முடியாது” என தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் ” இருவரும் மெத்த படித்தவர்கள். விருப்பத்தின் பேரில் இருவரும் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். இருவரும் வேறு வேறு நகரங்களில் பணியாற்றிய போதும் ஒருவர் இடத்திற்கு மற்றவர் சென்றுள்ளனர். இருவரும் 16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளனர்.
16 ஆண்டுகளாக புகார்தாரர் மேல்முறையீட்டாளரின் கோரிக்கைக்கு இணங்கி யுள்ளார். 16 ஆண்டுகளாக திருமண ஆசை காட்டி உறவு வைத்துக் கொண்டால் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. நீண்ட கால உறவில் இருவருக்கும் இடையே எந்த வித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
16 ஆண்டுகளாக இருவரும் பாலியல் உறவில் இருந்துள்ளனர் என்பதிலிருந்து இவர்களுக்கு இடையேயான உறவில் எந்தவிதமான கட்டாயமோ நிர்பந்தமோ இருக்கவில்லை என்று முடிவு செய்ய முடிகிறது. திருமண வாக்குறுதியின் பேரில் மட்டுமே பாலியல் உறவுகள் தொடர்ந்ததாக கூறப்படும் இத்தகைய கூற்றுகள் நீண்டகால உறவுகள் காரணமாக குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையை இழக்கின்றன. திருமண வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அந்த உறவில் நீண்ட காலம் இருக்கும் புகார்தாரரின் கூற்று நம்பும்படியாக இல்லை. இருவரும் நீண்ட காலம் லிவ் இன் உறவில் வாழ்ந்ததால் திரேமணம் செய்து கொள்வதாக க் கூறி உறவு வைத்துக் கொண்டதாக புகார் கூற முடியாது.
தம்பதிகள் நீண்ட இ சேர்ந்து வாழும் போது ஆணுக்கு எதிராக பெண் பாலியல் வன்கொடுமை புகார் செய்ய இயலாது. இது போன்ற சூழ்நிலையில் பாலியல் உறவுகளுக்குப் பின்னால் திருமண வாக்குறுதி மட்டும் காரணமாக இருந்தது என்பதை தீர்மானிப்பது கடினம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்…















