இந்தியா
சுனாமிக்கு பின்னர் இதுதான்… நிலநடுக்கம் குறித்த குஷ்புவின் அனுபவம்!

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தனது நிலநடுக்க அனுபவம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#image_title
நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தமிழ்நாட்டி இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அன்மையில் வெளியிட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள குஷ்பு நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த தனது அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருக்களில் உள்ளோம். இங்கு என்சிஆர் முழுவதும் பலத்த நடுக்கம். சுனாமிக்குப் பிறகு இந்த நிலநடுக்க அனுபவம் உள்ளது. இந்த நடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் உள்ள மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் அப்படியே நகர, சோஃபாக்கள் அலறுவது போல் இருந்தது, கீழே ஒரு அமைதியான ஜெனரேட்டர் போன்ற சத்தம் எங்களை வேகமாக வெளியேறச் சொல்ல, நாங்கள் வீட்டுக்கு வெளியில் வந்துவிட்டோம். அனைவரும் வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.