இந்தியா
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி உயர்வு.. உலக வங்கி அறிவிப்பு

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி சதவீதம் உயர்த்தப்படுகிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டில் 8.7 சதமாக இருந்த நிலையில் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உட்பட பல்வேறு காரணங்களால் 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னரும் மீண்டும் இந்தியாவின் ஜிடிபி 6.5% ஆக தொடங்கிய குறைந்ததால் இந்தியாவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளது என்றும் இந்தியாவின் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றும் அதனால் இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதமாக உயர்த்துவதாகவ்ம் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இந்த சதவீதம் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ ஆகியவைகளுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2022 – 23 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருப்பதையும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022 – 23 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதம் உயரும் என்பது இந்திய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

















