தமிழ்நாடு
நடிகர் கருணாஸ் திடீர் கைது: என்ன காரணம்?

நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் அந்த அமைப்பின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே
இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அவர் முயற்சி செய்தார் என்பதும் ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டு விட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அதிமுகவுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் என்று சமீபத்தில் கருணாஸ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவகங்கைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக கருணாஸ் அறிவித்திருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


















