ga('set', 'anonymizeIp', 1);
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இந்த படத்தை பாராட்ட திரையுலக பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பகத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிட வில்லை. விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் புதிய பக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அனிருத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆபத்தான காட்சிகளில் இன்னும் பெரியதாகவும் காப்பவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றியிருக்கிறார். இறுதியாக ரோலக்ஸ் சாரை பார்க்க பயமாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் நீங்கள் உங்களின் ரசிகர் மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்ஹ்டி விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார்.
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கார்த்தி மற்றும் சூர்யா இணைந்து நடிக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருவட்டார் ஊராட்சி…
தமிழகத்தில் கடந்த…
This website uses cookies.