தமிழ்நாடு
கொரோனாவில் இருந்து மீண்ட கனிமொழி: வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அட்வைஸ்

திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நேற்று கொரோனா கிட் அணிந்து வந்தார் என்பதும் தகுந்த பாதுகாப்புடன் அவர் வாக்களித்து விட்டு மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கொரோனாவில் இருந்து திமுக எம்பி கனிமொழி மீண்டு விட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு இன்று எடுத்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இருப்பினும் மீண்டும் வீட்டில் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதனை அடுத்து அவர் சில நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் என்று தெரிகிறது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட திமுக எம்பி கனிமொழிக்கு, திமுக தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















