சினிமா செய்திகள்
சூர்யா-ஜோதிகாவுக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இன்று ’ஜெய்பீம்’ படம் பார்த்து தனது கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
’ஜெய்பீம்’ பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். pic.twitter.com/YjSkfaeeiO
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2021
ஏற்கனவே பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் ஜெய்பீம் படம் பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ‘ஜெய்பீம்’ படத்தை பார்த்து இது குறித்து தனது கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.சூர்யா மற்றும் அவரது குழுவினர்களுக்கு நன்றிகள்’ என தெரிவித்துள்ளார்.
சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.@Suriya_offl @tjgnan @2D_ENTPVTLTD @srkathiir& team பெரும் நன்றிகள்! #JaiBhim pic.twitter.com/mmzvvd0AjX
— pa.ranjith (@beemji) November 1, 2021














