சினிமா செய்திகள்
22 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக நாயகனுடன் இணையும் நடனப்புயல்..!
Published
2 years agoon
By
Barath
22 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க உள்ளார் நடிகர் பிரபுதேவா.
உலகநாயகன் கமல்ஹாசனும் நடனப்புயல் பிரபுதேவாவும் இணைந்து நடித்து கடந்த 1998-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலா காதலா. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணியினர் மீண்டும் ‘விக்ரம்’ திரைப்படத்துக்காக இணைந்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அரசியல் படமாக விக்ரம் இருப்பதால் நிச்சயமாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Dear Guru..This is our humble gift to you sir.. Wishing you a very happy birthday. Please do keep inspiring us always sir @ikamalhaasan ????https://t.co/z8mEbtgldU
#ஆரம்பிக்கலாங்களா#என்வீரமேவாகையேசூடும் #vikram #HBDKamalHaasan
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 7, 2020
ஒரே ஷெட்யூலில் இத்திரைப்படத்தை முடித்துத் தருவதாகவும் கமலிடம் லோகேஷ் உறுதி தெரிவித்துள்ளாராம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே விக்ரம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
விக்ரமனை வீழ்த்தி பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டித் தூக்கிய அசீம்; என்ன பரிசு தெரியுமா?
-
கமல் சட்டையில் காக்கா கக்கா போயிடுச்சா? பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு என்ன இப்படி வந்திருக்காரு!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
என்ன இப்படி பண்ணிட்டானுங்க; கமல்ஹாசன் புத்தாண்டு போஸை வச்சு செய்த ரஜினி ரசிகர்கள்!
-
பிக்பாஸ் வீட்டில் வரும் வாரம் இரண்டு எவிக்ஷான்.. அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்!
-
நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!