சினிமா செய்திகள்
வீரமங்கை வேலுநாச்சியாராக லேடி சூப்பர் ஸ்டார்..?- விரைவில் அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வேலுநாச்சியார் என்னும் திரைப்படத்தில் மகாராணியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சிவகங்கையின் ராணியாக சரித்திரத்தில் பெண் அரசியாக வெற்றி பெற்று நிற்பவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். இந்த சரித்திர பயோபிக் திரைப்படத்தில் ராணி ஆக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகத போதிலும் பட டைட்டிள், கேமிரா, இயக்கம் ஆகியவற்றைக் குறித்தத் தகவல்களை தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பிசி ஸ்ரீராம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 18k ஸ்டுடியோஸ் தயாரிக்க ராஜேந்திரன் மணிமாறம் இப்படத்தை இயக்குகிறார். வசனம் ஜீவபாரதியால் எழுதப்பட்டுள்ளது.
#VeeraMangaiVeluNachiyar – The Queen of Sivaganga – Shoot from Pongal. Directed by#RajendranManimaran
Camera – @pcsreeram
Dialogue by #Jeevabharathi
Official & Legal Permission got.
Produced by #18KStudios. Her 224-th Death Anniv.- Dec. 25th. @onlynikil pic.twitter.com/oiN4fZsaBt— r.s.prakash (@rs_prakash3) December 28, 2020










