வீடியோ
நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ’காலம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. படத்தின் டீசர் வெளியாகி வைரலான நிலையில், வானில் இருள் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. தற்போது, காலம் என்ற செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
யுவனின் இசையில் ராப் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா டரியங் மற்றும் பாலிவுட் நடிகையான கல்கி கோச்சலின் உள்ளிட்ட பெண்களே நடனமாடுகின்றனர்.
இன்னமும் அஜித், வித்யா பாலன் டூயட் பாடல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுவனின் இசையில் அலிஷா தாமஸ் மற்றும் யூனோவு இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலை யூனோவு எழுதியுள்ளார்.