Connect with us

சினிமா

100 பேரு சோறு சாப்பிடுறாங்கன்னா.. பீப் வசனங்களை பேசி மிரட்டும் ஜெயம் ரவி.. அகிலன் டிரைலர்!

Published

on

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்னதாகவே அகிலன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அப்போது ஒரு டீசரும் வெளியானது.

#image_title

ஆனால், அந்த டீசருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரைலர் கெட்ட வார்த்தைகளுடன் சரியான கட்ஸ்களுடன் கச்சிதமாக உள்ளதை பார்த்த ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி கன்ஃபார்ம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நெகட்டிவ் ரோலில் ஜெயம் ரவி ஹார்பரில் நடக்கும் கடத்தல்களை அம்பலப்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

பிரியா பவானி சங்கர் காக்கிச் சட்டையில் போலீஸாக நடித்துள்ளார். ஜெயம் ரவியை என்கவுன்டர் செய்யப் போவதாக ஹீரோயினே சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

1 நிமிஷம் கழித்து  வரும் அந்த பீப் வார்த்தை வசனம் தான் டிரைலரிலேயே ஹைலைட்டாக மாறி உள்ளது. கெட்ட வார்த்தையில் ஜெயம் ரவி பேசினாலும், மோசமாகவோ தப்பாகவோ இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதே அகிலன் டிரைலருக்கு பலமாக மாறி உள்ளது. எப்படி இருந்தாலும், சென்சாருக்கு பிறகு படத்தில் அந்த வசனம் இடம் பெறாது. ஓடிடியில் அகிலன் வெளியாகும் போது அந்த வசனம் இடம்பெறும் என்பது தெரிந்த விஷயம் தான்.

அந்த பவர்ஃபுல் வசனத்திற்கு பிறகு கடைசியில் ஹரீஷ் பெரடியை கழுவி கழுவி ஊற்றி விட்டு கடைசியில், அவர் கூப்பிட்டதும் அண்ணா என சொல்லும் சீன் அப்படியே புதுப்பேட்டை படத்தை நினைவுப் படுத்துகிறது.

 

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?