சினிமா
100 பேரு சோறு சாப்பிடுறாங்கன்னா.. பீப் வசனங்களை பேசி மிரட்டும் ஜெயம் ரவி.. அகிலன் டிரைலர்!

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்னதாகவே அகிலன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அப்போது ஒரு டீசரும் வெளியானது.

#image_title
ஆனால், அந்த டீசருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரைலர் கெட்ட வார்த்தைகளுடன் சரியான கட்ஸ்களுடன் கச்சிதமாக உள்ளதை பார்த்த ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி கன்ஃபார்ம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
நெகட்டிவ் ரோலில் ஜெயம் ரவி ஹார்பரில் நடக்கும் கடத்தல்களை அம்பலப்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
பிரியா பவானி சங்கர் காக்கிச் சட்டையில் போலீஸாக நடித்துள்ளார். ஜெயம் ரவியை என்கவுன்டர் செய்யப் போவதாக ஹீரோயினே சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
1 நிமிஷம் கழித்து வரும் அந்த பீப் வார்த்தை வசனம் தான் டிரைலரிலேயே ஹைலைட்டாக மாறி உள்ளது. கெட்ட வார்த்தையில் ஜெயம் ரவி பேசினாலும், மோசமாகவோ தப்பாகவோ இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதே அகிலன் டிரைலருக்கு பலமாக மாறி உள்ளது. எப்படி இருந்தாலும், சென்சாருக்கு பிறகு படத்தில் அந்த வசனம் இடம் பெறாது. ஓடிடியில் அகிலன் வெளியாகும் போது அந்த வசனம் இடம்பெறும் என்பது தெரிந்த விஷயம் தான்.
அந்த பவர்ஃபுல் வசனத்திற்கு பிறகு கடைசியில் ஹரீஷ் பெரடியை கழுவி கழுவி ஊற்றி விட்டு கடைசியில், அவர் கூப்பிட்டதும் அண்ணா என சொல்லும் சீன் அப்படியே புதுப்பேட்டை படத்தை நினைவுப் படுத்துகிறது.