சினிமா
வேற லெவல் வாத்தி.. 100 கோடி வசூலை கடந்த தனுஷ் படம்!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் காதலர் தினம் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி வாத்தி திரைப்படம் வெளியானது.
இயக்குநர் வெங்கி அட்லூரி வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போதே வாத்தி திரைப்படம் தெலுங்கில் 4 வாரம் ஓடும் என்றும் தமிழில் 8 வாரங்கள் ஓடும் என்றும் கூறியிருந்தார்.

#image_title
நடிகர் தனுஷும் வாத்தி படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார். இந்நிலையில், படம் வெளியாகி 3 வாரங்களே ஆன நிலையில், 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கல்வியை மையமாக கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியானது வாத்தி திரைப்படம். நடிகர் தனுஷ் மிகவும் இளமையாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருந்தார்.
சமுத்திரகனி வில்லனாக மிரட்டிய இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கு கொடுத்திருந்த வேலையை கச்சிதமாக செய்திருந்தார்.

#image_title
வாத்தி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையிலும், படத்தின் வசூல் 15 நாட்களிலேயே 100 கோடியை கடந்துள்ளது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷுக்கு இந்த ஆண்டு வெளியான முதல் படமான வாத்தி திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்து, தாடி மீசையுடன் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.