சினிமா செய்திகள்
‘பத்துதல’ படத்திற்குப் பிறகு சிம்புவின் அடுத்தப் பட அறிவிப்பு எப்போது?

‘பத்துதல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்புவின் அடுத்தப் பட அறிவிப்பு எப்போது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலரும் நடித்திருக்கக்கூடிய ‘பத்துதல’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

Pathu Thala
இதன் இசை வெளியீட்டு விழா வருகிற 18ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இதனைப் படக்குழு நேற்று சென்னையில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தது. ஏ.ஆர். ரஹ்மான் மேடையில் லைவ்வாக பாடல்களும் பாட இருக்கிறார்.
தற்போது பாங்க்காங்கில் மார்ஷியல் ஆர்ட் பயிற்சியில் நடிகர் சிம்பு பிஸியாக இருக்கும் சிம்பு சென்னைக்கு வரும் 15ம் தேதி வருகிறார். ‘பத்துதல’ படத்திற்குப் பிறகு அதிகளவு ஆக்ஷன் தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் அதற்காகவே சிம்பு மார்ஷியல் ஆர்ட் பயின்றிருக்கிறார் எனவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே, இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு அடுத்தப் படத்தில் இணைகிறார் என சொல்லப்படும் நிலையில், நடிகர் சிம்பு பாங்க்காங்கில் இருந்து சென்னை திரும்பியதும் அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்ப் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் எனவும் www.bhoomitoday.com-க்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.