சினிமா செய்திகள்
திடீரென பெயரை மாற்றிய ஜெயம் ரவி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, திடீரென தனது திரைப்பெயரை மாற்ற முடிவு செய்துள்ளார். அவர் தனது பெயரிலிருந்து “ஜெயம்” என்ற பகுதியை நீக்கி, இனி ரவி அல்லது அவரது முழுப்பெயரான ரவி மோகன் என அழைக்கப்பட விரும்புவதாக அறிவித்துள்ளார்.
“என் பெயரில் இருந்து ‘ஜெயம்’ என்பதனை நீக்குவது எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னேற்றும் வகையில் ஒரு முக்கியமான முடிவாகும். என் உண்மையான பெயரான ரவி மோகன் என அழைக்கப்படுவதால், என் பயணத்தில் புதிய மாற்றங்களை வரவேற்கிறேன்,” என ரவி கூறியுள்ளார்.
2003-ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர், ரவியுடன் ஜெயம் என்ற பெயரும் இணைந்துவிட்டது. இதனால், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவரும் அவரை ஜெயம் ரவி என அழைக்க ஆரம்பித்தனர்.
ரவியின் இந்த மாற்றம் ரசிகர்களிடையே கலவையான கருத்துக்களை உருவாக்கியுள்ளது. சிலர், “எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெயர் ஜெயம் ரவி,” என்று தெரிவித்திருக்க, மற்றவர்களோ, “ஒரு புதிய தொடக்கத்தை வரவேற்கும் இந்த மாற்றம் ரவியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்,” என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.















