தமிழ்நாடு
மேதாவி ரவி… மனைவியை வைத்து சூதாடியது எந்த வகையான திறமை: விளாசிய திமுக எம்பி செந்தில்குமார்!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். அதில், சூதாட்டத்தை திறமையின் விளையாட்டு என கூறி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார். எனக்கு ஒரு டவுட்டு! அந்த 5 பேர் தங்களின் பொதுவான மனைவியை வைத்து சூதாடினர்களே.. அது எந்த வகையான திறமையின் கீழ் வரும் ரவி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் மாநில அரசிடம் அழுத்தம் கொடுத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளை தடை செய்ய வலியுறுத்துகிறார். ஆனால் மேதாவி ரவி சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்கிறார். நீங்க உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவு பண்ணுங்க என்றும் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் பக்கத்தில்.