சினிமா
அதிரடி மன்னன் ஜாக்கி சானின் ‘Vanguard’ படம் – நாளை தமிழகத்தில் ரிலீஸ்! #Trailer

ஆக்ஷன் திரைப்படங்களின் ஜாம்பவானாக விளங்கும் ஜாக்கி சானின், ‘வான்கார்ட்’ திரைப்படம் நாளை தமிழகத்தில் வெளியாகிறது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இத்திரைபடத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
அந்த டிரெய்லரைப் பார்க்க:
ஜாக்கி சானுக்குத் தற்போது 66 வயதாகிறது. முன்பு போல அவரால் நினைத்த ஸ்டன்ட்களை எல்லாம் செய்ய முடிவதில்லை. இருப்பினும் அவர் முழு முயற்சியில் ஸ்டன்ட் காட்சிகளில் பின்னிப் பெடலெடுத்து வருகிறார். வான்கார்ட் திரைப்படமும் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.