சினிமா செய்திகள்
அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான டிரைலர்

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் யானை திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் கலந்து உள்ளன
குறிப்பாக சென்டிமெண்ட் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருப்பதாக இந்த டிரைலரை பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருண் விஜய் ஆவேசமாக பேசும் பஞ்ச் வசனமும் டிரைலரின் இறுதியில் உள்ளதை அடுத்து இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது