சினிமா
அச்சு அசலாக MGR போலவே இருக்கும் அரவிந்த்சாமி – இது வைரல் ரகம் #Thalaivi

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் கங்கனா ரணாவத். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இயக்குநர் விஜய் இந்தப் படத்திற்கு வெகு நாட்களாக ஷூட்டிங் செய்து வருகிறார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று ‘தலைவி’ திரைப்படக் குழு, சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களில் எம்.ஜி.ஆர் போலவே காட்சியளிக்கிறார் அரவிந்த்சாமி.
ஒரு புகைப்படத்தில் அவர் தொண்டர்களுக்கு வணக்கம் வைப்பது போலவும், இன்னொரு படத்தில் சின்னக் குழந்தைகளுடன் சரிசமமாக அமர்ந்து உணவருந்துவது போலவும் படங்கள் இருக்கின்றன.
It was not just an honour to play the role of Puratchi Thalaivar MGR, but a great responsibility. I thank director A.L. Vijay & producers @vishinduri @shaaileshrsingh for having faith in me. I humbly post these pics in Thalaivar’s memory, today.#Thalaivi #MGR #ArvindSwamiasMGR pic.twitter.com/F4KY07Q4Dt
— arvind swami (@thearvindswami) December 24, 2020